;
Athirady Tamil News

டிரம்ப் இன் அதிரடி; ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்

0

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது.

இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என அமெரிக்கா தெளிவுபடுத்தியது.

70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே
இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்தஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.

H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.

இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முதல் வெளிநாட்டினருக்கான வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்கள் தானாகவே நீட்டிப்பு செய்யும் முறை முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.