;
Athirady Tamil News

ஐரோப்பா செல்ல முயன்ற கிளிநொச்சி உத்தியோகர்த்தர் எல்லையில் சுட்டுக்கொலை; கதறும் உறவுகள்

0

ஐரோப்பா செல்லும் வழியில் பெலாரஸ் எல்லையில் கிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகர்த்தர் உட்பட 2 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்றதாக கூறப்படுகின்றது. இந் நிலையில் வெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோத பயணம்
குறித்த உத்தியோகத்தருடன் மற்றுமொரு இலங்கையரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் மற்றை நாட்டுக்குள் நுழைய முற்பட்ட போது அங்கு வந்திருந்த குறித்த நாட்டு இராணுவத்தினர் சிலர் அவர்களை கடும் சித்திரவதைக்குள்ளாக்கி சுட்டுக் கொன்றதாக கூறப்படுகின்றது.

அதோடு அவர்களில் உடலை ஆற்றுக்குள் வீசியதாகத் தெரியவருகின்றது. அதேவேளை 2021ம் ஆண்டிலிருந்து இவ்வாறான ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட 78 பேர் அந்த நாட்டு இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில் வெளிநாட்டு மோகத்தால் ஆட்கடத்தல்காரர்கள் ஊடாக வெளிநாடு செல்லும் இளையோர்கள் தங்கள் உயிரை பறிடுத்த சம்பவம் தாயகத்தில் மட்டுமல்லாது பௌலம் பெயர் மக்களிடமும் பெரும் சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.