;
Athirady Tamil News

உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறிய சாக்ரடா ஃபேமிலியா

0

ஸ்பெயினில் உள்ள சாக்ரடா ஃபேமிலியா (Sagrada Família) உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறியுள்ளது.

சிலுவையின் முதல் பகுதி பார்சிலோனாவில் கட்டுமானத்தில் உள்ள தேவாலயத்தின் மையக் கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டமையை தொடர்ந்து, இது உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறியுள்ளது.

அதன்படி, இந்த தேவாலயத்தின் தற்போதைய உயரம் 162.91 மீட்டர் ஆகும். இதன் மூலம், 135 ஆண்டுகளாக (1890 முதல்) உலகின் மிக உயரமான தேவாலயமாக இருந்த ஜெர்மனியில் உள்ள உல்ம் மினிஸ்டர் (Ulm Minster) தேவாலயத்தின் சாதனை அதிகாரப்பூர்வமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

சாக்ரடா ஃபேமிலியா தேவாலயம் உலகின் மிகப்பெரிய முடிக்கப்படாத கத்தோலிக்க தேவாலயமாகும், இது 143 ஆண்டுகளுக்கும் மேலாக (1882 முதல்) கட்டுமானத்தில் உள்ளது.

புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் அன்டோனி கௌடி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்த வழிபாட்டுத் தலத்தின் கட்டுமானம், பார்சிலோனா நகரின் மையத்தில் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இதன் பிரதான கட்டிடம் அடுத்த ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் மாதங்களில் மீதமுள்ள சிலுவை பகுதிகள் சேர்க்கப்படுவதால், சாக்ரடா ஃபேமிலியா தேவாலயத்தின் மொத்த உயரம் 172 மீட்டராக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.