;
Athirady Tamil News

வீதி விபத்தில் இளைஞன் உடல் நசுங்கி பலி

0

திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கபுகொல்லாவ-ஆனவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த எஹியா உல்முதீன் சஹீல் அஹமட் (வயது 19) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மஹதிவுல்வெவ பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு சென்ற பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த இளைஞன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது .

மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.