;
Athirady Tamil News

ஆண்ட்ரூ மனைவியின் பிரித்தானிய வாழ்க்கை முடிந்தது… புதிய தகவல்

0

சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டு அவர் ராஜகுடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது முன்னாள் மனைவியான சாராவின் நிலை பரிதாபத்துக்குரியதாகியுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூ
பிரித்தானிய இளவரசரும் மன்னர் சார்லசின் தம்பியுமான ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் ஏமாற்றி, கடத்தி, சீரழித்து, பலருக்கு விருந்தாக்கியவரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்தததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைகுனிவை சந்தித்தது.

அதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூவின் மனைவியான சாரா ஃபெர்குசனும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது சமீபத்தில் தெரியவந்ததால் பெரும் சர்ச்சை உருவானது. ஆண்ட்ரூவின் பட்டங்கள் பறிக்கப்பட்டு, அவர் வாழும் வீட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், ஆண்ட்ரூவின் மனைவியாகிய சாரா, தன் கணவருடன் வாழும்போதே வேறொரு நபருடன் தவறான உறவிலிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

விவாகரத்து செய்து பிரிந்தாலும், ராஜகுடும்பத்துக்குச் சொந்தமான ராயல் லாட்ஜ் என்னும் பிரம்மாண்ட மாளிகையில் ஆண்ட்ரூவுடன் தங்கியிருந்தார் சாரா.

ஆனால், இப்போது ராயல் லாட்ஜை விட்டு வெளியேற ஆண்ட்ரூவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு தங்க ஒரு வீடு ஏற்பாடு செய்துள்ளார் மன்னர் சார்லஸ்.

ஆண்ட்ரூ ராயல் லாட்ஜை விட்டு வெளியேற ஆண்ட்ரூவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், இனி சாராவும் அங்கு தங்கமுடியாது.

ஆக, வாழுமிடத்தையும் இழந்து, கணவரையும் பிரிந்து நிற்கும் நிலை சாராவுக்கு ஏற்பட்டுள்ளது. அவர் சார்ந்த தொண்டு நிறுவனங்களும் அவரைக் கைவிட்டுவிட்டன.

அமெரிக்காவில் எப்ஸ்டீன் தொடர்பான விடயங்கள் தீவிரமடைந்துவருவதால், ஒருவேளை சாரா FBI விசாரணைக்கு உட்படுத்தப்படும் அபாயமும் உள்ளது.

பிரித்தானிய வாழ்க்கை முடிந்தது…
ஆக, சாராவின் பிரித்தானிய வாழ்க்கை முடிந்தது என்கிறார் ராஜகுடும்ப நிபுணர் ஒருவர். கைவிடப்பட்டு அநாதரவாக நிற்கும் சாராவை, அவரது மகளான இளவரசி யூஜீனி தனது கணவரான ஜாக் ப்ரூக்ஸ்பேங்குக்குச் சொந்தமான வீட்டில் தங்க வைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விடயம் என்னவென்றால், அந்த வீடு போர்ச்சுக்கல் நாட்டில் உள்ளது. அதாவது, சாரா பிரித்தானியாவிலிருந்து விரைவில் வெளியேற இருக்கிறார்.

ஆக, இப்படி ராஜகுடும்பத்துக்கு ஒரு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திய சாரா போன்றவர்களுக்கு இதுதான் சரியான முடிவு என்கிறார் அந்த ராஜகுடும்ப நிபுணர்.

இப்படிப்பட்டவர்கள் தலைமறைவாகத்தான் வாழவேண்டும் என்று கூறும் அந்த ராஜகுடும்ப நிபுணர், சாராவின் பிரித்தானிய வாழ்க்கை முடிந்தது என்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.