;
Athirady Tamil News

நிமிடத்திற்கு 170,000 டொலர்… காலநிலை நடவடிக்கை தொடர்பில் சவுதி அரேபியாவின் கோர முகம்

0

எண்ணெய் வளத்தால் செழிப்புடன் இருக்கும் சவுதி அரேபியா காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு கடும் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடும் வெப்பத்தால் அவதி
பல தசாப்தங்களாக, சர்வதேச காலநிலை நடவடிக்கைகளைத் தடுக்கவும் தாமதப்படுத்தவும் சவுதி அரேபியா வேறு எந்த நாட்டையும் விட கடுமையாகப் போராடியுள்ளது.

புதைபடிவ எரிபொருட்களைக் கைவிடுவது என்பது வெறும் ஒரு கற்பனை என்றும் கூறி வருகிறது. இருப்பினும், சவுதி அரேபியா தற்போது உள்நாட்டிலேயே புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்கு என அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், காலநிலை மாற்றத்தை திட்டமிட்டே தாமதப்படுத்தும் சவுதி அரேபியா, கடும் வெப்பத்தால் அவதிப்பட்டும் வருகிறது. அதன் 36 மில்லியன் மக்கள் தொகையும் ஏற்கனவே வாழ முடியாத சூழலில் போராடுகிறார்கள்.

மூன்று தசாப்தங்களுக்கு முன்பு, உலகளாவிய ஐ.நா. காலநிலை ஒப்பந்தத்தை சவுதி அரேபியா கிட்டத்தட்ட புதைத்துவிட்டது. ஐ.நா. காலநிலை பேச்சுவார்த்தைகளில் முடிவுகளை எடுக்க சவுதி அரேபியாவும் அதன் எண்ணெய் வளம் மிக்க ஒபெக் கூட்டாளிகளும் தடுத்து வருகின்றனர்.

காலநிலை தொடர்பான நடவடிக்கைகளால் சவுதி அரேபியா பாதுகாத்து வருவது உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளரான Aramco நிறுவனத்தை என்றே கூறுகின்றனர்.

ஒரு பீப்பாய் எண்ணெயை தரையில் இருந்து எடுக்க Aramco நிறுவனத்திற்கு வெறும் 2 டொலர் மட்டுமே செலவாகும். ஆனால் ஒரு பீப்பாய் எண்ணெய் கடந்த வருடத்தில் 60 முதல் 80 அமெரிக்க டொலர் வரையில் விற்பனை செய்யப்பட்டது.

ஒவ்வொரு நிமிடத்திற்கும்
இதனால், 2016 முதல் 2023 வரை அரம்கோ நிறுவனம் ஒவ்வொரு நாளும் 250 மில்லியன் டொலர் லாபத்தை ஈட்டியது. இதன் காரணமாகவே காலநிலை மாற்றத்திற்கு வலுவான உலகளாவிய எதிர்வினையைத் தடுக்க சவுதி அரேபியா விரும்புகிறது, அது அவர்களின் பொருளாதாரத்தை உண்மையில் அச்சுறுத்துவதாக அவர்கள் கருதுகின்றனர்.

மட்டுமின்றி, Aramco காரணமாக ஒவ்வொரு நிமிடத்திற்கும் தோராயமாக 170,000 டொலர் தொகையை சவுதி அரேபியா அரசாங்கம் பல வருடங்களாக ஈட்டி வருவதாக மதிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் சவுதி அரேபியா மக்களுக்கும் மலிவு விலையில் எண்ணெய் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் சவுதி அரேபியாவில் வெப்பநிலை என்பது 1979 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கு இடையே 2.2C அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

சவுதி அரேபியாவின் மிக முக்கியமான நிகழ்வான ஹஜ் ஏற்கனவே கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெப்ப அலையில் குறைந்தது 1,300 முஸ்லிம் யாத்ரீகர்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.