யாழ்ப்பாணம் பொதுசன நூலகம்: மாணவர்களின் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்த சிறுவர் பத்திரிகை தயாரித்தல் போட்டி!
யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களின் ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தும் முகமாக சிறுவர் பத்திரிகை தயாரித்தல் போட்டியினை நடாத்தவுள்ளது.
இப் போட்டியில் தெரிவு செய்யப்படும் சிறுவர் பத்திரிகை யாழ்ப்பாணம் பொது நூலகத்தால் அச்சு வடிவில் வெளியிடப்படவுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விபரங்களை பிரதம நூலகருடன் நேரடியாக அல்லது 0212226025 என்ற இலக்கத்தில் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் போட்டிக்கான படைப்புகளை எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு முன்பாக சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.