;
Athirady Tamil News

ஷேக் ஹசீனாவுக்கு எதிரான தீர்ப்பு பற்றி இந்தியா கருத்து

0

புதுடெல்லி,

சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்தாத கூறப்பட்ட குற்றச்சாட்டில், வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்துள்ளது. மரண தண்டனைக்கு ஷேக் ஹசீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வங்காளதேசத்தில் பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு 3 மாதங்களே இருக்கும்நிலையில், இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்பான சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை கவனத்தில் கொண்டுள்ளோம். நெருங்கிய அண்டை நாடு என்ற முறையில், வங்காளதேச மக்களின் சிறப்பான நலன்களுக்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது. அந்நாட்டில் அமைதி, ஜனநாயகம், நிலைத்தன்மை நிலவ விரும்புகிறோம். அதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.