;
Athirady Tamil News

யாழ் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை ; காலநிலை மாற்றத்தால் வேகமெடுக்கும் ஆபத்து

0

யாழ் மாவட்டத்தில் கடந்த மாதங்களாக கட்டுப்பாட்டிலிருந்த டெங்கு தொற்று கடந்த இரு வாரங்களுக்குள் வேகமாக அதிகரித்து அபாய நிலையை எட்டியுள்ளது என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிபாளர்  எச்சரித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (21) பிற்பகல் இடம்பெற்றது.

டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம்
யாழ் மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டத்தில், வடக்கு மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட செயலர் உள்ளிட்டோரின் பிரசன்னத்துடன் பொது சுகாதார சேவைகள் பதவி நிலை அதிகாரிகள், யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேச சபைகள், பிரதேச செயலகங்கள், பாடசாலைகள், கல்வித் திணைக்களங்கள், அரச பொது நிறுவனங்கள், ஆகியவற்தின் பதவி நிலை அதிகாரிகள் முப்படைகள் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பின் அதிகாரிகள், என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டின் கடந்த 10 மாதங்களில், குறிப்பாக கடந்த இரு வாரங்களில், காலநிலை மாற்றம் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மாவட்டத்தின் அபாய மட்டத்தை கடந்துள்ளது.

இது தொடருமானால் பாரிய சவாலை யாழ் மாவட்டம் எதிர் நோக்க நேரிடும். அதனால் துறைசார் அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதுடன் பாடசாலைகள், வீடுகள், ஆலயங்கள், அரச நிறுவனங்கள், என அனைத்து இடங்களிலும் அது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் சுகாதார சேவைகள் பணியகம் வழங்கும் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.