யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி சேவைச்சங்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கல்
அண்மையில் ஏற்பட்ட “டித்வா” புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி சேவைச்சங்கம் இன்றைய தினம் (29.12.2025) அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இலங்கை வங்கி கணக்கிற்கு ரூபா 500,000.00 நிதியினை வைப்பிலிட்டு, அதற்கான பற்றுச்சீட்டின் பிரதியினை அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளித்தனர்.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான எஸ். கபிலன் உடனிருந்தார்கள்.
