வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிப்பு!
வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு வவுனியா மாநகரசபை மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது மாவீரர்களது பெற்றோர்கள் பிரதான வீதியில் இருந்து நிகழ்வு இடம்பெறும் மண்டபம் வரை மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.













