வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு இருபத்தைந்து வீட்டுத் திட்ட மக்களுக்கு உதவிய புலம்பெயர் உறவுகள்.. (வீடியோ, படங்கள்)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு இருபத்தைந்து வீட்டுத்திட்ட மக்களுக்கு உதவிய புலம்பெயர் உறவுகள்.. (வீடியோ, படங்கள்)
கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் மிகவும் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு 1ஆம் வட்டாரம், 25 வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற மக்கள் வெள்ளத்தில் வதியும் நிலையை புங்குடுதீவு வேலணை பிரதேசசபை உறுப்பினர் சஞ்ஜீவ் அவர்கள் அறிய தந்த நிலையில் புங்குடுதீவு 1ஆம் வட்டாரம், 25 வீட்டுத்திட்டத்தில் வசிக்கின்ற மக்களுக்கு புலம்பெயர் புங்குடுதீவு உறவுகள் நால்வர் சிலநாட்களுக்கு தேவையான பெறுமதியான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கி வைத்தனர். அக்குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் பொதிகளை வேலணை பிரதேசசபை உறுப்பினர் சஞ்ஜீவ் மற்றும் J/28 கிராம சேவகர் கிறிஸ்ரி யுவராஜ் ஆகியோரால் கடும் சிரமத்துக்குள் வெள்ளத்தின் மத்தியில் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாட்டை புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தை சேர்ந்த சுவிஸ்சில் வதியும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய முன்னாள் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் அவரது வேண்டுகோளுக்கு இணங்க, இதற்கான நிதி உதவியை வழங்கி உதவிய பிரித்தானியாவில் வசிக்கின்ற தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும உறுப்பினரான ஊர்ப்பற்றாளன் பரமலிங்கம் மயூரன், சுவிஸில் மொஸேடோர்ப்பில் வதியும் புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை சேனாதிராஜாவும், புங்குடுதீவு இறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸில் மொஸேடோர்ப்பில் வதியும் சின்னத்துரை நாகலிங்கம் அவர்களும் சுவிஸில் மொஸேடோர்ப்பில் வதியும் புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த கனகரெத்தினம் பாலகுமார் ஆகியோருக்கு அப்பயனாளிகளான பொதுமக்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதேவேளை புங்குடுதீவு 1ஆம் வட்டாரம், 25 வீட்டுத்திட்டத்தில் வருடாவருடம் நிலவுகின்ற இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இவ்வீட்டுத் திட்டத்துக்கு அண்மையில் உள்ள உப்புக்களிக் குளத்தை ஒரு அடிக்கு ஆழமாக்கி அதன் மணல்களை இவ்வீடுகளுக்கு முன்னாள் பரப்புவதெனவும், இதுக்கான அனுமதி கிடைத்ததும் மூன்று மாதத்தின் பின்னர் செய்வதாக பிரித்தானியாவில் வசிக்கின்ற தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும உறுப்பினரான ஊர்ப்பற்றாளன் பரமலிங்கம் மயூரன் உறுதியளித்துள்ளார்.
அதேபோன்று கனடா பழைய மாணவர் சங்கம் அடுத்த வருட முற்பகுதியில் செய்யவுள்ள கள்ளியாற்றுத் திட்டத்தின் மூலம் வரும் மணல்களை இவ்வீடுகளுக்கு முன்னாள் பரப்ப உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் எந்தவொரு மழையிலும் வெள்ளம் வராது, உப்புக்களிக் குளத்துக்கு அச்சுற்று வட்டார தண்ணீர் சென்று, இவ்வீடுகள் பாதுகாக்கப்படும் என நம்பிக்கையுடன் தெரிய வருகிறது.
மக்கள் சேவையே மகேசன் சேவை..
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புங்குடுதீவு இருபத்தைந்து வீட்டுத் திட்ட மக்களுக்கு உதவிய புலம்பெயர் உறவுகள்.. (வீடியோ)



























