;
Athirady Tamil News

பேராறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

0

வவுனியா பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன்இ குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

அந்தவகையில் பேராற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளமையால் அதன் 3 வான்கதவுகளும் 4.81 மீற்றர் உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன.

இதனால் நீர் செல்லும் பகுதியிலும்இ பேராறு அணையின் கீழ் பகுதியிலும் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.