யாழில் பலியான கிளிநொச்சி இளம் குடும்பஸ்தர் ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்
மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவருக்கு கடந்த 22ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் 10 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 27ஆம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.