;
Athirady Tamil News

சவக்கிடங்கில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட பெண்: அடுத்து நிகழ்ந்த துயரம்

0

பிரித்தானியாவில், உயிரிழந்ததாக தவறாக ஒரு பெண் சவக்கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

சவக்கிடங்கில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட பெண்
இங்கிலாந்திலுள்ள Darlington என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த ஆலிவ் மார்ட்டின் (Olive Martin, 54) என்னும் பெண்மணி, திடீரென வலிப்பு வந்து தவித்ததுடன் நிலைகுலைந்து சரிந்துள்ளார்.

அவரை பரிசோதித்த அவசர உதவிக்குழுவினர், அவர் இறந்துவிட்டதாகக் கூறி அவரை சவக்கிடங்குக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், சவக்கிடங்கில், அவர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளன.

சோகம் என்னவென்றால், அவர் எவ்வளவு நேரம் அப்படியே சவக்கிடங்கில் விடப்பட்டார் என்பது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை, சிறிது நேரத்திற்குப் பின் அவர் மரணமடைந்துவிட்டார்.

ஆக, அவரை சவக்கிடங்குக்குக் கொண்டு செல்வதற்கு பதிலாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கமுடியுமா என அவரது சட்டத்தரணிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஆலிவ் மரணம் தொடர்பில் விசாரணை ஒன்று நடைபெற்றுவரும் நிலையில், அது தொடர்பான நீதிமன்ற விசாரணை, ஜனவரி மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.