;
Athirady Tamil News

யாழில் கோர விபத்து! தாயும் மகளும் ஸ்தலத்திலே பலி

0

யாழ்.சாவகச்சேரி கனகம்புளியடி – புத்தூர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று(21) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சாரதி கைது
புத்தூரிலிருந்து மீசாலை நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதன்போது முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்துள்ளனர்.

அவர்களுள் தாயும் மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு சாரதியும், பிறிதொரு பெண்ணும் காயமடைந்துள்ளனர். டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.