கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த பேரதிர்ச்சி ; மதில் சுவர் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு
பதுளை, ஹிந்தகொட பகுதியில் மதில் சுவருடன் கூடிய மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில், அதற்குள் சிக்கிய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மதில் சுவருடன் கூடிய மண் திட்டு திடீரென சரிந்து வீழ்ந்ததில், அங்கிருந்த இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மிக மோசமான நிலையில் இருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பதுளை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் ஆகியோருடன் இணைந்து பிரதேச மக்களும் தீவிரமாக ஈடுபட்டனர்.