;
Athirady Tamil News

அசோக ரன்வல தொடர்பில் நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

0

முன்னாள் சபாநாயகரும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

அண்மையில் வாகன விபத்துச் சம்பவமொன்றுடன் ரன்வல தொடர்புபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளின் போது அசோக ரன்வலவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

மஹர நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. கடந்த 11ம் திகதி சபுகஸ்கந்த பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியிருந்தது.

மேலும், அசோக ரன்வல வாகனம் செலுத்துவதற்கான உடற் தகுதியுடையவரா என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹர நீதிமன்ற நீதவான் பண்டார இளங்கசிங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். தேசிய போக்குவரத்து மருத்துவ மையத்தில் அசோக ரன்வலவை முன்னிலைப்படுத்தி, அவருக்கு வாகனம் ஓட்டுவதற்கான உடற் தகுதி குறித்து பரிசோதனை செய்யுமாறு கோரியுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இதேவேளை, அசோக ரன்வலவின் இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகளில் அல்கஹோல் உட்கொண்டமைக்கான சான்றுகள் இருக்கவில்லை என அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.