;
Athirady Tamil News

வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை ; இலங்கையில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

0

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும்.

முன்மொழிவுகள்
இதில் பங்கேற்குமாறு அரசாங்கத் துறைத் தலைவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகத்திற்கான முன்மொழிவுகளை இந்த கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு துறைத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட கலந்துரையாடலின் போது நான்கு நாள் வேலை வாரத்தை அமுல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதால், அதற்கான பொருத்தமான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு துறைத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.