;
Athirady Tamil News

போர்க்கப்பல்களை அனுப்புமாறு கோரிக்கை விடுத்த டிரம்ப்: சீனா நிராகரிப்பு

0

வாஷிங்டன்,

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஈரான் அந்நாட்டில் உள்ள ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளது, இதனால் அதன் வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து கிடைக்க வேண்டுமானால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களது போர்க்கப்பலை அங்கு அனுப்ப வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

சீனா, பிரான்ஸ், ஜப் பான், தென் கொரியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஹார்முஸ் ஜலசந் தியை பாதுகாப்பதற்காக அங்கு தங்களது போர்கப்பல்களை அனுப்ப வேண்டும் டிரம்ப் கோரிய நிலையில், சீனா இதனை நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சீனா வெளியுறவு அமைச்சகம் கூறியிருப்பதாவது:

மத்திய கிழக்கு நாடுகளின் நேர்மையான நண்பராகவும் முக்கியமான கூட்டாளியாகவும் இருக்கும் சீனா, மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருடனும் தொடர்புகளை தொடர்ந்து வலுப்படுத்தும். மேலும் பதற்றத்தை குறைத்து அமைதியை மீண்டும் நிலைநாட்டுவதற்கான ஆக்கப்பூர்வமான பங்கையும் வகிக்கும்” என்று கூறியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.