;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் சோகத்தில் ஆழ்த்திய விபத்து ; நண்பர்களுடன் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

0

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பூறல் பகுதில் நேற்று (15) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தத்துடன் மேலும் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் தோப்பூர் -06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞன் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீதிவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.