வவுனியா – கூமாங்குளம் கிராம அலுவலர் அலுவலகம் பிரதி அமைச்சரால் திறந்து வைப்பு
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வவுனியா, கூமாங்குளம் கிராம அலுவலர் அலுவலகம் இன்று கூட்டுறவுத் துறை பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா, கூமாங்குளம் கிராம அலுவலர் அலுவலகமானது 15 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது. புனர் நிர்மாண வேலைகள் நிறைவடைந்த நிலையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
கிராமசேவையாளர் என்.ஶ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், கிராம மக்கள், முன்பள்ளி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.







