புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை வேலணை பிரதேச செயலாளர் திரு.அகிலன் அவர்கள் தலைமையில் சந்திப்பு.. (வீடியோ படங்களுடன் விரிவான செய்தி)
புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை வேலணை பிரதேச செயலாளர் திரு.அகிலன் அவர்கள் தலைமையில் சந்திப்பு.. (வீடியோ படங்களுடன் விரிவான செய்தி)
நேற்றைய தினம் புங்குடுதீவு 25 வீட்டுத்திட்ட மக்களை வேலணை பிரதேச செயலாளர் திரு.அகிலன் அவர்கள் தலைமையில் ஏனைய அரச திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகள் பலரும் சந்தித்து கலந்துரையாடினர்.
வெள்ள அனர்த்தத்தினால் இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அண்மையில் நிறைவடைந்த பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அப்பகுதி அதிகளவு வெள்ளம் தேங்கக்கூடிய இடம் என சுட்டிக் காட்டப்பட்டதுடன் அவர்களுக்கு மாற்றிடம் வழங்க வேண்டும் என அங்கு கலந்து கொண்ட மக்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது.
அதன்போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் *அவ்வீடுகளில் வதியும் இப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி அம்மக்கள் சம்மதித்தால் மாற்றிடம் வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது* அதன் அங்கமாக நேற்றையதினம் அவ்வீட்டு மக்களுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இப்பகுதியில் வசிக்கின்ற பெரும்பான்மையான குடும்பங்கள் தாங்கள் இங்கே வசிப்பதற்கு தமது விருப்பத்தினை தெரிவித்தனர். அப்பகுதியில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட சில குடும்பங்களுக்கு அப்பகுதியில் கட்டியிருக்கின்ற வேறு வீடுகளை ஏற்பாடு செய்வதாகவும் மேலும் இக்கிராமத்துக்கு வீதி வேலை ஆரம்பமாக உள்ளதாகவும், வீடுகளின் அத்திவாரம் மற்றும் கூரை உயத்துவது தொடர்பாகவும், இப்பகுதியில் அணை அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் வேலணை பிரதேசசபை உறுப்பினர் சஞ்ஜீவ் அவர்களினால் பிரித்தானியாவில் வசிக்கின்ற பரமலிங்கம் மயூரன் மற்றும் சுவிஸில் வசிக்கின்ற சொக்கலிங்கம் ரஞ்சன் ஆகியோரின் ஆலோசனையில் புலம்பெயர் புங்குடுதீவு மக்களின் நிதியுதவியில் அருகில் காணப்படுகின்ற உப்புக்களி குளம் ஆழப்படுத்தி அதிகளவு நீரை தேக்குவதுடன் அங்கு பெறப்படுகின்ற மணலை இவ்வீடுகளை சுற்றி பரவுவதற்கான வேலை இடம்பெற உள்ளமை சுட்டிக் காட்டப்பட்டது.
அவர்களும் அதற்கான அனுமதியினை துரிதப்படுத்துவதாகவும் கூறினார்கள். எதிர் வரும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இவ்விடயங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரினால் சபைக்கு தெளிவுபடுத்தப்படும்.







https://www.facebook.com/share/v/17n8MGMCgC/?mibextid=wwXIfr