;
Athirady Tamil News

கொழும்பு நீதிமன்றத்தில் சட்டத்தை மீறிய பெண்ணுக்கு சட்ட சிக்கல்

0

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில், தனது தந்தை சாட்சியமளிப்பதை தனது கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவு செய்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரி இதனை கவனித்துடன், பெண்ணைக் கைது செய்து கையடக்க தொலைபேசியையும் பறிமுதல் செய்தார்.

இதன்போது, அறியாமையினால் இந்தத் தவறைச் செய்ததாகப் பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த பெண்ணுக்கு கொழும்பு தலைமை நீதவான் 1,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

அத்துடன் சம்பந்தப்பட்ட காணொளியை கையடக்க தொலைபேசியிலிருந்து அழிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வருங்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் எச்சரித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.