கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழா: முன்னேற்பாட்டுப் பணிகளை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் குழு!
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை அவதானிப்பு செய்வதற்கான உத்தியோகபூர்வ விஜயமானது இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
குறித்த விஜயத்தில் நெடுந்தீவில் பிரதேசசெயலர் என். பிரபாகரன், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல பரிபாலகர் அருட்பணி P.பத்திநாதன் அடிகளார், பிரதேசசபை தவிசாளர் ச.சத்தியவரதன் மற்றும் கடற்படை உத்தியோகத்தர்கள் இணைந்துகொண்டனர்.
பக்தர்களின் உயரிய நலன்கருதி இலங்கை கடற்படையால் ஆற்றப்படும் ஆரம்பகட்ட பணிகளை பார்வையிட்டார்.
