கிளிநொச்சி போராட்டத்தில் மயங்கி விழுந்த பெண்; ஓடிவந்து உதவிய பொலிஸார்
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தாயார் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில் மயங்கி விழுந்த தாயாருக்கு அங்கு கடமையில் இருந்த பொலிஸார் ஓடிவந்து உதவியதுடன் , அவசர உதவி வழங்கிய பொலிசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.