;
Athirady Tamil News

பிள்ளைகளை தனியாக விட்டுச் செல்ல விருப்பம் இல்லை… பெண் எடுத்த பயங்கர முடிவு

0

இந்தியாவின் ஹைதராபாதில், ரயில் நிலையம் ஒன்றில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பிள்ளைகளை தனியாக விட்டுச் செல்ல விருப்பம் இல்லை…
ஹைதராபாதில் மென்பொறியாளராக பணியாற்றிவருபவர் ஷாந்தி ரெட்டி (Pinninti Vijaya Shanthi Reddy, 38). ஷாந்தியின் கணவரான விஜய ரெட்டி, துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்.

தம்பதியரின் பிள்ளைகளான சேத்தனா ரெட்டியும் (18) விஷால் ரெட்டியும் (17) ஹாஸ்டலில் தங்கி படித்துவருகிறார்கள்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை தன் பிள்ளைகளை ஹாஸ்டலிலிருந்து அழைத்துக்கொண்டு Cherlapally என்னும் ரயில் நிலையத்துக்கு காரில் சென்றுள்ளார் ஷாந்தி.

காரை ரயில் நிலையத்தின் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ரயில் நிலையத்துக்கு உள்ளே சென்றுள்ளார்கள் மூவரும்.

பின்னர், அவர்கள் மூன்று பேரும் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்ட மக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் வந்த காரை பரிசோதித்துள்ளனர் பொலிசார்.

காருக்குள், ஷாந்தி எழுதியதாக கருதப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள ஷாந்தி, தன் பிள்ளைகளை இந்த உலகில் தனியாக விட்டுச் செல்ல தனக்கு விருப்பமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தாயும் பிள்ளைகளும் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் அந்த துயர சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.