;
Athirady Tamil News

லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபி மகன் சுட்டுக் கொலை

0

லிபிய முன்னாள் தலைவர் கடாபியின் மகன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிபியாவின் முன்னாள் தலைவர் மும்மர் கடாபி. இவர் லிபியாவை 42 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு லிபியாவில் நடந்த மக்கள் போராட்டத்தால் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவர் போராட்டக்காரர்களால் கொல்லப்பட்டார். இதனிடையே, கடாபி கொல்லப்பட்டப் பின்னர் லிபியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

லிபியாவில் ஆட்சி மாற்றம்
அப்போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததற்காக கடாபியின் 2வது மகன் 53 வயதுடைய சைப் அல் இஸ்லாமுக்கு லிபியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. எனினும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

சைப் அல் இஸ்லாம் லிபியா தேர்தலில் போட்டியிடுவேன் என்று 2021ம் ஆண்டு அறிவித்த நீலையில் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை.

இதையடுத்து, லிபியாவின் சிண்டான் நகரில் சைப் அல் இஸ்லாம் வசித்து வந்தநிலையில், சைப் அல் இஸ்லாம் நேற்று வீட்டில் வைத்து மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

சிண்டான் நகரில் சைப் அல் இஸ்லாம் வசித்து வந்த வீட்டிற்குள் நேற்று மதியம் 2 மணிக்கு 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்துள்ளது.

அந்த கும்பல் வீட்டிற்குள் இருந்த சைப் அல் இஸ்லாமை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படும் நிலையில் இச் சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.