;
Athirady Tamil News

தாய் – தந்தைக்கு இடையே சண்டை – மகள் எடுத்த விபரீத முடிவு

0

தாய் – தந்தைக்கு இடையே தொடர்ந்து நடக்கும் சண்டையைத் தாங்க முடியாத 22 வயது மகள், நேற்று வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் பாய்ந்து அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் களனி, திப்பிட்டிகொடவைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

களனியில் இருந்து மோட்டார் சைக்கிள் ஊடாக தெஹிவளை நோக்கி சென்ற நிலையில் விபரீத முடிவினை எடுத்துள்ளார்.

இளம் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணை நேற்று களுபோவில தெற்கு கொழும்பு போதனா மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி பந்துல ஜெயசிங்க முன்னிலையில் நடைபெற்றது.

இளம் பெண் எழுதிய கடிதம் களுபோவில தெற்கு கொழும்பு போதனா மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.