;
Athirady Tamil News

ரஷ்ய இராணுவ உளவுத்துறை துணைத்தலைவர் மீது துப்பாக்கி சூடு

0

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 443வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.

அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க இரு தரப்பும் மறுத்து வருகிறது.

இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தின் உளவுத்துறை துணைத்தலைவர் ஜெனரல் விளாடிமிர் அலெக்சிவ். இவர் 2011ம் ஆண்டு முதல் உளவுத்துறை துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இவர் நேற்று மாஸ்கோவில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த விளாடிமிர் அலெக்சிவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.