யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவிற்கு ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்” எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் வருடாந்த பொதுகூட்ட நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இணையத்தின் தலைவர் ந.சுகிர்தராஜ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இதன்போதே பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா கௌரவிக்கப்பட்டுள்ளார்..