இரு இளைஞர்களின் உயிரை பறித்த சம்பவம் ; ஒருவர் கைது
பொத்துஹெர, பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கொழும்பு குருநாகல் வீதியில் ரஞ்சனகம சந்தியில் கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதற்கு எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதியும் அதன் பின்னால் பயணித்தவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 33 மற்றும் 35 வயதுடைய பொல்கஹாவெல பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்
மேலும், குறித்த பேருந்தின் சாரதி கைதுசெய்யபப்பட்டுள்ளதுடன், பொத்துஹெர பொலிஸாரால் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கப்படுகிறது.