;
Athirady Tamil News

டிரம்ப் பற்றி வாக்குவாதம்; ஆத்திரத்தில் மகளை சுட்டு கொன்ற தந்தை

0

நியூயார்க்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் கிறிஸ் ஹாரிசன். இவருடைய மகள் லூசி ஹாரிசன் (வயது 23). தன்னுடைய காதலர் சாம் லிட்லருடன் தந்தையை சந்திக்க இங்கிலாந்தில் இருந்து ஆவலாக புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்போது, குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக கிறிஸ் துப்பாக்கி ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி வைத்திருக்கிறார். இதுபற்றி மகளிடம் கிறிஸ் கூறியிருக்கிறார். துப்பாக்கி பற்றி பேசினால் லூசி மனவேதனை அடைந்து விடுவார் என சாம் கூறுகிறார்.

டிரம்ப் பற்றி வாக்குவாதம்; ஆத்திரத்தில் மகளை சுட்டு கொன்ற தந்தை
இதேபோன்று டிரம்ப் பற்றி இருவரும் பேசி உள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அதில் ஒரு கட்டத்தில், லூசி தந்தையை நோக்கி ஒரு சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால், அது நானாக இருந்தால், அப்போது எப்படி உணர்வீர்கள்? என கேட்டுள்ளார்.

டிரம்ப் பற்றிய இந்த வாக்குவாதத்திற்கு பதிலளித்த கிறிஸ், எனக்கு வேறு 2 மகள்கள் உள்ளனர். அதனால் பெரிய வருத்தம் எதுவும் ஏற்படாது என பதிலாக கூறியிருக்கிறார். இதனால் லூசி கடுமையாக மனவருத்தம் அடைந்து, அந்த இடத்தில் இருந்து ஓடி போய் விட்டார்.

லூசியின் தாயார் ஜேன் கோட்ஸ் கூறும்போது, விவாதம் செய்வதில் லூசி ஆர்வம் கொண்டவள் என்றார். சம்பவ நாளில், சமையலறையில் வேலையில் இருந்த மகள் லூசியை தந்தை கிறிஸ் அழைத்து கொண்டு படுக்கை அறைக்கு சென்றார். அடுத்த 15 விநாடிகளில் பலத்த சத்தம் கேட்டது. இதன்பின் மனைவியை கிறிஸ் சத்தம் போட்டு அழைத்துள்ளார்.

அருகேயிருந்த சாம் உடனடியாக ஓடி சென்று பார்த்தபோது, லூசி தரையில் காயங்களுடன் கிடந்துள்ளார். அவர் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பலியாகி விட்டார். கோர்ட்டில், அந்த சம்பவம் எப்படி நடந்தது, என்ன நடந்தது? என தெரியவில்லை என கூறிய கிறிஸ், கை பட்டு துப்பாக்கி வெடித்து விட்டதா? தெரியாமல் வெடித்து விட்டதா? என தெரியவில்லை என்றார்.

கிறிஸ் கடந்த காலத்தில் மதுவுக்கு அடிமையாகி உள்ளார். மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையும் பெற்றிருக்கிறார். சம்பவத்தின்போது, 500 மி.லி. வெள்ளை ஒயினை குடித்திருக்கிறார். அதனை கோர்ட்டில் ஒப்பு கொண்டதுடன் மகளை கொலை செய்து விட்டேன் என்றும் புலம்பியுள்ளார். டிரம்ப் பற்றி வாக்குவாதத்தில் ஆத்திரத்தில் மகளை தந்தையே சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.