;
Athirady Tamil News

புங்குடுதீவு ஆலடியில் சிரமதான நிகழ்வு

0

புங்குடுதீவு ஆலடியில் சிரமதான நிகழ்வு

13-02 -2026 அன்று புங்குடுதீவு ஆலடி சந்தி மற்றும் புங்குடுதீவு வரசித்தி விநாயகர் ஆலயத்தின் முன்றல் , குழந்தை கடைச் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் புங்குடுதீவு உலக மையம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் 17 பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் நிரந்தர தர்மகர்த்தாவாக விளங்கிய உயர்திரு.சபாரெத்தினம் இராசரெத்தினம் அவர்களின் நினைவாகவும் அவரது துணைவியார் அமரர். இராசரெத்தினம் நவநீதம் அவர்களின் நினைவாகவும் அமரர்களின் புதல்வி திருமதி. வசந்தா
அவர்களின் ரூபாய் ஒரு லட்சம் (100000) நிதியுதவியில் சிரமதானப் பணியில் பங்காற்றிய பொதுமக்கள் அனைவருக்கும் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த சிரமதானப் பணிகளில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு. கருணாகரன் நாவலன், கிராமசேவகர் திரு. ச.சிறீதரன் ( நிமால் ) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.