;
Athirady Tamil News

2026இல் உலக சுற்றுலாத்துறை படைக்கவுள்ள சாதனை

0

2025 ஆம் ஆண்டில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.

ஐ.நா சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய World Tourism Barometer அறிக்கையின்படி, சர்வதேச வருகை உலகளவில் 4வீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

உலகின் அதிக சுற்றுலாப் பயணிகள்
இது 2009 முதல் 2019 வரையான தொற்றுநோய்க்கு முந்தைய காலப்பகுதியில் நிலவிய 5வீத சராசரி வளர்ச்சியை நெருங்கத் தொடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2026இல் உலக சுற்றுலாத்துறை படைக்கவுள்ள சாதனை | Tourism Is Booming In 2026

ஐரோப்பா தொடர்ந்தும் உலகின் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பிராந்தியமாக நீடிக்கிறது. அங்கு சுமார் 800 மில்லியன் பயணிகள் வருகை தந்ததுடன், 2024 ஐ விட 6வீத சீரான வளர்ச்சியும் பதிவாகியுள்ளது.

இருப்பினும், மிகவேகமான வளர்ச்சியைப் பதிவு செய்த நாடுகள் வழக்கமான பிரபல்யமான இடங்கள் அல்ல. பிரேசிலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 37வீதம் ஆகவும், எகிப்தில் 20வீதம் ஆகவும், எத்தியோப்பியாவில் 15வீதம் ஆகவும், பூட்டானில் 30வீதம் ஆகவும் உயர்ந்துள்ளது.

கிழக்கு ஆபிரிக்காவிற்கு அப்பால் உள்ள சிறிய தீவுக்கூட்டமான சீஷெல்ஸ் கூட 13வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.