;
Athirady Tamil News

மூத்த மகனின் உயிரை பறித்த தாயின் கர்ப்பகால போட்டோஷூட் ; பெரும் சோகத்தில் உறவுகள்

0

பெங்களூருவில் தாயின் மகப்பேறு கால போட்டோஷூட்டின்போது, மூன்று வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சரண் மற்றும் சுவாதி தம்பதியினரின் 3 வயது சிறுவன் இந்த விபத்தில் பலியானார்.

போட்டோஷூட்
எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த சுவாதி, தனது இரண்டாவது குழந்தையின் வருகைக்காக போட்டோஷூட் எடுத்துக்கொண்டிருந்தபோது இந்த துயரம் நிகழ்ந்தது.

போட்டோஷூட் படப்பிடிப்பின் போது, அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அங்கிருந்த சிறிய நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளான்.

இதை அங்கிருந்தவர்கள் கவனிக்க தவறியதால், சிறுவன் நீரில் மூழ்கினான். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ உதவிக்குக் கொண்டு செல்லப்பட்டும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், போட்டோஷூட் நடந்த இடத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது கவனக்குறைவு ஏதேனும் இருந்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.