;
Athirady Tamil News

பிரான்சில் வரலாறு காணாத மழை, புயல் பாதிப்பு; 4 மாகாணங்களுக்கு ரெட் அலர்ட்

0

பாரீஸ்,

பிரான்சில் வரலாறு காணாத அளவுக்கு 36 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல மாகாணங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோன்று பெட்ரோ என பெயரிடப்பட்ட புயலால் கனமழை பெய்து வருகிறது. மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசி வருகிறது.

இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. கார்கள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், வீடுகள், குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் தேங்கியும் காணப்படுகிறது.

அவர்களை மீட்கும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. எனினும், தொடர் மழையால் மீட்பு பணி பாதிக்கப்பட்டு உள்ளது. 1959-ம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் பதிவான அதிகபட்ச மழை இதுவென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. இதனை தொடர்ந்து 4 மாகாணங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.