நுவரெலியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு; மீண்டும் தொடங்கிய வரிசை
நுவரெலியா பிரதான நகரில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக நுவரெலியா மற்றும் நானுஓயா பிரதேசங்களில் வரிசையில் காத்திருந்து சமையல் எரிவாயுவை மக்கள் பெற்றுச் செல்வதாக கூறப்படுகின்றது.
முன்னதாக எதிர்காலத்தில் தடையற்ற முறையில் எரிவாயு விநியோகத்தை முன்னெடுப்பதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் பொதுமக்களுக்கு உறுதி அளித்தது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (14) ஏற்பட்ட இரண்டு நாள் விநியோகத் தடை மற்றும் சந்தையில் ஏற்பட்ட எதிர்பாராத கேள்வி அதிகரிப்பு காரணமாக தற்காலிகமாக விநியோகத் தட்டுப்பாடு நிலவியதாக நிறுவனம் விளக்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.