யாழ். சர்வதேச விமான நிலையத்தை நேரில் ஆய்வு செய்தனர் அமைச்சர்கள் – எதிர்கால அபிவிருத்தி குறித்து முக்கிய ஆலோசனைகள்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு ஆகியோர் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர்.
அமைச்சர்கள் உள்ளிட்ட குழாம் விமான நிலையத்தை பார்வையிட்டதுடன் , எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
