;
Athirady Tamil News

நைஜீரியா: பயங்கரவாதத் தாக்குதலில் 33 போ் கொலை

0

வடமேற்கு நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில், ஐ.எஸ். அமைப்பின் ஆதரவு பெற்ற லகுராவா பயங்கரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்களில் 33 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

அண்டை மாகாணமான சோகோட்டோவில் இருந்து ஊடுருவிய இந்தப் பயங்கரவாதிகள், கால்நடைகளைத் திருடும் நோக்கில் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது அங்கு அமைதியை ஏற்படுத்தவும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் கூடுதல் ராணுவத்தினா் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனா்.

நைஜீரியாவின் வடக்குப் பகுதிகளில் நிலவும் இந்தப் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒடுக்க, அந்நாட்டு அரசு அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நைஜீரிய வீரா்களுக்குப் பயிற்சியளிக்க 100 அமெரிக்க வீரா்கள் அங்கு வந்துள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.