;
Athirady Tamil News

அமெரிக்காவில் குடியேறிகள் தொடர்பில் புதிய ஆணை ;பல்லாயிரம் பேர் கைதாக வாய்ப்பு

0

அமெரிக்காவில் சட்டப்படி குடியேறி இன்னும் நிரந்தரவாசத் தகுதி பெறாத அகதிகளைக் கைதுசெய்யும் புதிய ஆணையை டிரம்ப் நிர்வாகம் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த புதிய ஆணையின் கீழ் அதன்கீழ் பல்லாயிரம் பேர் கைது செய்யப்படக்கூடும் என கூறப்படுகின்றது.

பைடன் நிர்வாகத்தின்போது குடியேறிய அகதிகள்
குடியேறிகள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் நிலையில் இருப்போர் நாட்டுக்குள் வந்து ஓராண்டுக்கு மேலாகியிருந்தால் அவர்களைக் கைதுசெய்யப் புதிய உத்தரவு வழியமைக்கும் என்றும் க் தெரிவிக்கபப்டுகின்றது.

அதேவேளை விண்ணப்ப நடைமுறைகள் முடியும் வரை அவர்கள் காவலில் இருக்கவேண்டும் என்கிறது உள்துறை அமைச்சு.

இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பைடன் நிர்வாகத்தின்போது அமெரிக்காவில் குடியேறிய200,000க்கும் அதிகமான அகதிகளிடையே டிரம்ப் நிவாகத்தின் புதிய ஆணை அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.