;
Athirady Tamil News

நாட்டை உலுக்கும் போதைப்பொருள் அபாயம் ; வெளியான திடுக்கிடும் தகவல்

0

கடந்த 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 110 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். போதைப்பொருள் கடத்தல்காரர்களால் நாட்டுக்குப் பெருமளவு பணம் இழக்கப்படுகிறது.

இந்த சட்ட விரோத வருமானம் நாட்டின் அபிவிருத்திக்கோ அல்லது எதிர்காலப் பயணத்துக்கோ எந்தவிதத்திலும் பங்களிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டைச் சூழ்ந்துள்ள இந்தப் பயங்கரமான போதைப்பொருள் ஆபத்திலிருந்து, சமூகத்தையும் குழந்தைகளையும் பாதுகாப்பது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பு என்றும் ரவி செனவிரத்ன வலியுறுத்தியுள்ளார்.

இதனால், நாட்டின் பல இளம் உயிர்கள் பலியாகி வருவதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன கவலை வெளியிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.