;
Athirady Tamil News

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தமிழ் பொலிஸ் பொறுப்பதிகாரி

0
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக சிவானந்தன் நிதர்சன் இன்றையதினம் திங்கட்கிழமை  உத்தியோகபூர்வமாக கடமையேற்றார்.
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையேற்க சென்ற வேளை பொலிஸ் நிலையத்தில் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து உத்தியோகபூர்வ ஆவணத்தில் அறிக்கையை எழுதி, தனது பணிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

அதனைத் தொடர்ந்து சமூக மட்ட அமைப்பினர், மதகுருமார் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்களை வழங்கி அவரை கௌரவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.