;
Athirady Tamil News

பிள்ளையானுக்கு திடீர் சுகயீனம்; மருத்துவமனையில் அனுமதி

0

விளக்கம்றியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுளதாக சிறைசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தினார். சுகயீனம் காரணமாக நேற்று பிற்பகல் அவர் சிறைச்சாலை மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், பிள்ளையான் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.