விமான நிலையத்தில் ஆபத்தான பொருளுடன் சீனப் பிரஜைகள் அறுவர் அதிரடியாக கைது
கட்டுநாயக்கா விமான நிலையத்தில், சீனாவைச் சேர்ந்த ஆறு பேரை விமான நிலைய சுங்கப் பிரிவினர் இன்று (16) அதிகாலை கைது செய்துள்ளனர். சிகரெட் தொகை ஒன்றை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த குற்றசாட்டில் சீனர்கள் கைதாகியுள்ளனர்.
அறுவரும் மூன்று வெவ்வேறு விமானங்களில் நாட்டை வந்தடைந்த நிலையில், அவர்களது பயணப் பைகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 75,900 சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இச் சிகரெட்டுகளின் பெறுமதி ஒரு கோடியே 13 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.