;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு

0
வயிற்றுவலி காரணமாக வாந்தி எடுத்த சிறுமி ஒருவர், வாந்தி சுவாசக் குழாயினுள் சென்றதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 8 வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த 13ஆம் திகதி குறித்த சிறுமிக்கு வயிற்றுவலியுடன் கூடிய வாந்தி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் கடும் வயிற்றுவலி ஏற்பட்டு சிறுமி வாந்தி எடுத்துள்ளார்.

நிலைமை மோசமடைந்ததையடுத்து, சிறுமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வாந்தி எதிர்பாராத விதமாகச் சுவாசக் குழாயினுள் (Aspiration) சென்றமையே மரணம் சம்பவிக்கக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.