;
Athirady Tamil News

இனி `கேரளா’ அல்ல.. மாநிலத்தின் பெயர் மாற்றம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0

புதுடெல்லி,

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டசமன்றத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை மத்திய அரசு திருப்பி அனுப்பியது. அதற்கு பிறகு மீண்டும் கடந்த 2024-ம் ஆண்டு மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற வலியுறுத்தி 2-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இந்தநிலையில் சேவா தீர்த் வளாகத்தில் முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளாவின் பெயரை கேரளம் என பெயர் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.