;
Athirady Tamil News

பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு

0

பிரேசில், மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 21 பேர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரம் காட்டி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்தும் அம் மாநிலத்தில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.