;
Athirady Tamil News

ஐந்து மாதக் குழந்தையை குலுக்கி கொன்ற தாயின் காதலன்; ஆயுட்கால சிறைத்தண்டனை

0

2024 மார்ச் மாதம் லண்டன் வேல்ஸின் சுவான்சி (Swansea) பகுதியைச் சேர்ந்த ஜோர்டான் டூகல் (Jordan Dougal) என்ற தாய், தனது ஐந்து மாதக் குழந்தையான ஜென்சன்-லீயை (Jensen-Lee) தனது காதலன் தோமஸ் மோர்கனிடம் (Thomas Morgan) ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது கோபத்தில் குழந்தையை மோர்கன் மிகக் கொடூரமாகக் குலுக்கியதில், மூளை, முதுகுத்தண்டு மற்றும் கண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது.

மோர்கன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது
குழந்தையின் காயங்களை ஆய்வு செய்த மருத்துவ நிபுணர்கள், தாங்கள் இதுவரை கண்டதிலேயே மிக மோசமான காயங்கள் இவை என்று தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, உடனடியாக சுயநினைவை இழந்திருக்கலாம் என்றும், இது தற்செயலாகவோ அல்லது விளையாட்டாகவோ ஏற்பட்ட பாதிப்பு அல்ல, ஒரு கொடூரமான தாக்குதல் என்றும் நிபுணர்கள் நீதிமன்றத்தில் விளக்கமளித்தனர்.

இந்நிலையில் 29 வயதுடைய தோமஸ் மோர்கன், தான் நிரபராதி என்று கடந்த 15 மாதங்களாக கூறிவந்துள்ளார். குழந்தை வாந்தி எடுத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், அதிலிருந்து குழந்தையைக் காப்பாற்றவே தான் முயற்சித்ததாகவும் அவர் கூறிவந்துள்ளார். இதேவேளை, குழந்தையின் இறுதிச் சடங்கிலும் அவர் கலந்து கொண்டார்.

ஆனால், 2025 ஜூலை மாதம் விரிவான மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். இதை அடுத்து சுவான்சி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் இறுதியில், மோர்கன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.

அவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, அவர் குறைந்தது 19 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.