;
Athirady Tamil News

இலங்கையில் நேர்ந்த சோகம் ; டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் துரதிர்ஷ்டவசமாக பலி

0

குருநாகலில் டிராக்டரில் சிக்கி 15 வயது சிறுவன் ஒருவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

மேலதிக விசாரணை
கல்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 39 கந்த பகுதியில் நேற்று (26) காலை இச்சிறுவன் டிராக்டரின் சாரதி இருக்கைக்கு அருகில் ஏற முற்பட்ட போது தவறி விழுந்துள்ளார்.

இதன்போது குறித்த டிராக்டரின் சக்கரத்தில் சிறுவன் சிக்கியுள்ளார்.

காயமடைந்த சிறுவன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மஹநான்னேரிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.